வேம்பத்தூர் சிவன் கோவிலில் சைவ நன்னெறி வகுப்பு; இளைஞர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 03:05
மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர் ஆவுடைய நாயகி அம்மன் கோயிலில் சைவ நன்னெறி வகுப்புகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர், ஆவுடைய நாயகி அம்மன் கோயிலில் தினம்தோறும் அதிகாலை சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் கோயிலில் வளாகத்தில் தினந்தோறும் சைவ நன்னெறி மற்றும் திருவாசக பண்ணிசை பயிற்சி, திருவிளையாடல் புராண விளக்க உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை இலவசமாகவும் வழங்கி வருகின்றனர்.