வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 10:05
புதுச்சேரி ; புதுச்சேரி அடுத்த வில்லியனூர் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரிவேட்டை, 63 நாயன்மார் வீதியுலா, திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்நது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி பக்தரகள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.