திண்டுக்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம்; சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 03:05
திண்டுக்கல் ஸ்ரீ சக்தி சந்தான கணேசன் திருக்கோயிலில் மத நல்லிணக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; முஸ்லிம்கள் சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, புதூரில் உள்ளது சக்தி சந்தான கணேசர் கோயில். இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் புதூர் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பலர் பங்கேற்று, சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.