பதிவு செய்த நாள்
24
மே
2024
05:05
தொண்டாமுத்தூர்; பேரூர் மற்றும் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில், ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது.
பேரூர் ஸாமவேத பாராயண டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி விழா, பேரூர், ஸ்ரீ மஹா பெரியவா மணி மண்டபத்தில் நடந்தது. நேற்று காலை, மஹா பெரியவா கீர்த்தனைகளும், மாலையில், ருத்ர கன பாராயணமும் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, சங்கல்பம், மஹஸ்யானம், ருத்ர ஏகாதசி ஜபம், ஹோமம், வஸோத்தரை, சிறப்பு அபிஷேகம், பூஜை தீபாராதனை நடந்தது. மாலையில், ஸ்ரீ ஏக்நாத் பஜனா மண்டலியின், நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மஹா சங்கரா அனுஷ பூஜா டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி மஹோத்ஸவ விழா, காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மஹா சங்கரா மினி ஹாலில் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையும், 8:00 மணிக்கு, ஆவஹந்தி ஹோமமும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சங்கல்பம் மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, பத்மநாபன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. பகல், 11:30 மணிக்கு, உபநிஷத் பாராயணம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல், 1:00 மணிக்கு மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, மஹா சங்கரா அனுஷ பூஜா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன் வேம்பு ஐயர் செய்திருந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெரியவாவின் ஆசி பெற்றனர்.