வீரவநல்லூர்: பத்தமடை வில்வநாத சுவாமி கோயிலில் கந்தர்சஷ்டி விழா வரும் 13ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.விழா நாட்களில் காலை முதல் மதியம் வரை யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேக அலங்காரம், தீப ஆராதனையும், இரவு பக்தி சொற்பொழிவும் நடக்கிறது.கந்தர்சஷ்டியன்று காலையில் பால்குடம், காவடி வீதி உலாவும் மதியம் அபிஷேகமும் மாலையில் சூரசம்ஹாரமும் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான வரும் 19ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கந்தர்சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.