கோவை; கோட்டைமேடு பூமி நீளா நாயக சமேத கரி வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. இதில் முதல் நாள் உற்சவர் ஹம்ச வாகனத்திலும் இரண்டாம் நாள் சேஷ வாகனத்திலும் மூன்றாம் நாள் பஞ்சமுக ஹனுமான் வாகனத்திலும் நான்காம் நாள் கருட வாகனத்திலும் திருவீதியுலா வந்தார்.இதை தொடர்ந்துஉற்சவமூர்த்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆறாம் நாள் யானை வாகனத்திலும் ஏழாம் நாள் திருத்தேர் பவனியும் நடந்தது. கடந்த வியாழக்கிழமை 23-05-2024அன்று சுவாமி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. 25-05-2024 நிறைவு நாளில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெற்றனர்.