காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த மே 15 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 20 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 23 ஆம் தேதி நடந்தது. நேற்று தெப்பமும், இன்று புஷ்ப பல்லக்கும், நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை தெப்ப மண்டபத்தில் ஶ்ரீனிவாச பெருமாள் குறிச்சி சேவை கிளி மாலையுடன் அருள் பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் சீனிவாசன், செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர். வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை தெப்ப மண்டபத்தில் சீனிவாச பெருமாள் திருச்சி சேவை கிளி மாலையுடன் அருள் பாலித்தார்.