உலக நன்மை வேண்டி தவழ்ந்த படி யாத்திரை வரும் பக்தர்; திருவண்ணாமலை வந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 10:05
திருவண்ணாமலை; ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டம், கூடலாபாடியை சேர்ந்த ராஜகிரி மகராஜ் என்பவர், உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரியில் இருந்து ராமேஸ்வரம் வரை, தெர்மாகோல் உதவியுடன் சாலையில் தவழ்ந்த படியே யாத்திரை செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்., 14ல் யாத்திரையை துவங்கிய இவர், நேற்று திருவண்ணாமலை வந்தார். நகரின் முக்கிய பகுதியான தேரடி வீதி சாலையில் தெர்மாகோல் உதவியுடன் தவிழ்ந்தபடியே சென்றார். ‘‘உலக நன்மைக்காகவும், உலகம் முழுதும் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வாறு செல்கிறேன்,’’ என்றார் மகராஜ்.