வைகாசி வெள்ளி; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 10:05
கோவை; கோவை - குப்பிச்சிபாளையம் ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.