குத்தாலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2024 07:06
மயிலாடுதுறை; குத்தாலம் அருகே ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய சம்ப்ரோஷணப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா சம்ப்ரோஷணப் பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூன்று கால யாகசாலை பூஜைகள் காலை நிறைவு பெற்றது . பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலின் கோபுர கலசத்தை வந்தடைந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா சம்ப்ரோஷணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.