திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு அமாவாசை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2024 05:06
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) 100 கிலோ சந்தனம், 50 கிலோ விபூதி, 100 லிட்டர் கரும்புச்சாறு, 50 லிட்டர் திராட்சைச்சாறு , 50 லிட்டர் மாம்பழம், 508 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.