Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... திருவேடகம் சீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் திருவேடகம் சீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்காளி அம்மன் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடத்த கோவில் நிர்வாகிகள் தீர்மானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொங்காளி அம்மன் கும்பாபிஷேகம்;  கோலாகலமாக நடத்த கோவில் நிர்வாகிகள் தீர்மானம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
02:06

பல்லடம்; பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் பிரசித்தி பெற்ற பொங்காளி அம்மன் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து தேதி இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், நேற்று, கோவில் விழா குழுவினர் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, தீப ஸ்தம்பம் நடுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது: பொங்காளி அம்மன் கோவில், குறிப்பிட்ட சில சமூகத்துக்கு சேர்ந்தது என்பது மட்டுமன்றி, வட்டாரத்தில் உள்ள, 350க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இக்கோவிலில் வழிபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில், கோவில் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இங்கு கோலாகலமாக நடந்துள்ளன. பின்நாளில், கோவிலை சரிவர நிர்வகிக்காததன் காரணமாக, கோவிலின் வளர்ச்சி குறைந்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும். அடிக்கடி தேதியை மாற்றுவதால், பக்தர்கள் குழப்பம் அடைவதுடன், ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். இனி தேதியை தீர்மானித்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க கூடாது. கும்பாபிஷேக பணியில் பொதுமக்களையும் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்ட முடிவில், டிச., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், இது குறித்து அறநிலையத்துறையில் ஒப்புதல் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar