பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
11:06
பாகூர்; பாகூர் மூலநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது. நேற்று காலை 4.00 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிர்வாக அதிகாரி கோபாலக்கிருஷ்ணன், உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் இரவு அதிகார நந்தி, யானை, சிங்கம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வானங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா வரும் 20ம் தேதி காலை 8.00 மணிக்கு நடக்கிறது.