பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
11:06
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவிலில், திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது.
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், திருப்பணிகள் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று காலை, 4:30 முதல் 6:00 மணிக்குள், தனித்தனி சன்னதி கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடந்தது. அனைவரையும், செயல்அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். அறங்காவலர் குழுத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பூங்கொடி, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முரளிகிருஷ்ணன், நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, உபயதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், காலை, 7:00 முதல் 8:00 மணி வரை விருந்து உபசரிப்பும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.