பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
10:06
மாங்காடு; மாங்காட்டில் பழமை வாய்ந்த வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில், சுக்கிரன்பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் விழா, நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கேடயம் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி,மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நாளை மூன்றாம் மற்றும் நான்காம் கால யாக பூஜையில் திருவாராதனம், ஸஹஸ்ரநாம பாராயணம். 108 கலசஸ்நபந திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ம் தேதி காலை விமானம், மூலவர் உள்ளிட்ட பரிகாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவம், பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டினை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அருள்மிகு திருமுருகநாத ஸ்வாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கரி வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.