Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... நாக தோஷம் நீக்கும் ஜுவாலமுகி அம்மன் நாக தோஷம் நீக்கும் ஜுவாலமுகி அம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ருத்ரேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ருத்ரேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
11:06

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையத் தெருவில் மாணிக்க விநாயகர், காமாட்சியம்மன் உடனுறை மஹா ருத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பின், அனைத்து சன்னிதிகளுக்கும் புதிதாக விமானம், புதியராஜகோபுரம், பிரகாரங்களில் கருங்கல் தரைதளம், புதிய உற்சவ விக்ரஹகம் என, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 6:40 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் கோபுர விமான கலசத்திற்கும், காலை 10:00 மணிக்கு மஹா ருத்ரேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்களுக்கும் வேத விற்பன்னர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், பிற்பகல் 12:00 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை மாதனம்பாளையம் தெரு அன்பர்கள், இளைஞர்கள் மற்றும் சிவபக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் சுவாமிகள், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar