பதிவு செய்த நாள்
19
ஜூன்
2024
11:06
வாரணாசி: லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது, என பிரதமர் மோடி பேசினார். 3வது முறையாக பிரதமராகபதவியேற்ற பிறகு பிரதமர் மோடி நேற்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார். தொடர்ந்து காசி விஸ்வநாதரை வழிபட்டு, கங்கா ஆரத்தில் பங்கேற்றார்.
இது குறித்து பிரதமர் கூறியதாவது; காசியில் பாபா விஸ்வநாதரை வழிபட்டதன் மூலம் அளவற்ற திருப்தி அடைந்தேன். அனைத்து நாட்டு மக்களின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தனை செய்தேன்.
காசியில் உள்ள தசாஸ்வமேத் காட்டில் மா கங்கையின் தரிசனமும் வழிபாடும் என்னுள் புதிய ஆற்றலை நிரப்பியது. மா அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் அவரது ஆசிகள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.