கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் சுற்றிலும் தடுப்பு வேலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2024 11:06
தேவகோட்டை; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஜூன் 21 ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டம் தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்த நிலையில் சமரச ஏற்பாடுகளை தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேரோட்டம் மீண்டும் சில ஆண்டுகள் ஓடியது. 2006 ஆம் ஆண்டு தேரோட்டத்துடன் மீண்டும் ஓடவில்லை. சப்பரபவனி மட்டுமே நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆனித்திருவிழாவில் புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது. வெள்ளோட்டத்தில் தேர் அலங்காரம் செய்யப்படவில்லை. தேர் மட்டுமே இழுக்கப்பட்டது. திருவிழாவின் ஐந்தாம் நாள் 18 ஆண்டுகளுக்கு பின் தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தேர் அலங்கார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 18 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பணியை கிராமத்தினர் மகிழ்ச்சியோடு பார்த்து வருகின்றனர். சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், ஊரணியை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தேரோட்டம் சுமூகமாக நடத்துவதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து மாநில ஏ.டி.ஜி.பி. அருண், ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. துரை, எஸ் பி.க்கள், கலெக்டர் ஆஷாஅஜித் உட்பட போலீஸ் அதிகாரிகள் தேர், கோவில், தேரோடும் வீதியைச் சுற்றிலும் பார்வையிட்டனர்.