பதிவு செய்த நாள்
10
நவ
2012
10:11
முசிறி: முசிறியில் பாரதிய கிசான் சங்கமும், அகில பாரதிய துறவியர் சங்கமும் இணைந்து, 108 கோ பூஜையும், விளக்கு பூஜையையும் கைகாட்டியில் நடத்தினர். காவிரியில் சாக்கடை, ரசாயன கழிவுகள் கலந்து காவிரியின் புனிதம் கெடாமல் பாதுகாக்கவும், கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை காவிரியுடன் இணைக்க வேண்டியும், காவிரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என சர்வமத பிராத்தனையும், 108 கோ பூஜையும், 220 பெண்கள் பங்கேற்று கும்பம், விளக்கு பூஜையும் நடந்தது. சர்வமத பிரார்த்தனையுடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு, பாரதிய கிசான் சங்க மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். திருஈங்கோய்மலை கோயினி மாதாஜி வித்யாம்பாள் சரஸ்வதி ஜெயம்பா சரஸ்வதி, நிர்மலாம்பா சரஸ்வதி பங்கேற்று, குபேர லட்சுமி யாகம், நவக்கிரக யாகம், மஹாலட்சுமி யாகம், நடத்திர யாகம், பர்ஜன்ய யாகம், சாந்தி யாகம் உள்ளிட்ட யாகங்களை நடத்தினர். யாகம் வெற்றி பெற, 220 பெண்கள் பங்கேற்று கும்பம், விளக்கு பூஜை நடத்தினர். நிகழ்ச்சியில் பாரதிய கிசான் சங்க மாநில அமைப்பாளர் கோபி, விவசாய பிரிவு தலைவர் வைத்தீஸ்வரன், துறவிகள் தர்மபுரி ராமநந்தா, மதுரை சிவபால நந்தா, நாகேஸ்வர நந்தா உட்பட துறவிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.