வெள்ளா மருச்சுக்கட்டி பதினாறு பிள்ளை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 04:06
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை அருகே வெள்ளா மருச்சுக்கட்டி ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த பதினாறு பிள்ளை காளியம்மன், சுடலை கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூன் 20 அன்று விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு நாடி சந்தனம், மகாபூர்ணாகுதி, யாத்ராதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பட்டு திருப்புல்லாணி பாபு சாஸ்திரிகள் தலைமையில் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் பதினாறு பிள்ளை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை அப்பாஸ் கனி, சுப்பிரமணியன், பிரபு, கணேஷ் பாபு, பிரகாஷ் மற்றும் விழா கமிட்டியாளர்கள் வெள்ளா மருச்சுக்கட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.