Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ... வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் விமரிசை வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை கோலாகலம்; 26ல் சுவர்ண அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை கோலாகலம்; 26ல் சுவர்ண அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
10:06

பெங்களூர்; சிவாஜி நகர், திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 25, 26ம் தேதிகளில் 153ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. 26ல், சுவர்ண அபிஷேகம் நடக்கிறது.

சிவாஜி நகர் திம்மையா சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் வருஷாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டு 153ம் ஆண்டு விழா, வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது. முதல் நாளான, 25ல் மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கணபதி பூஜை, மஹா சங்கல்பம், ஸ்வாதி புண்யாஹவசனா, அனைத்து பரிவாரங்களுக்கும் கலச ஸ்தாபனை, காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சி அம்பாளுக்கு கலச ஸ்தாபனை, மூல மந்திரம், ஹோமம், பூர்ணாஹூதிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளான, 26ல் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், ஈஸ்வரர், பார்வதிக்கு சிறப்பு ஹோமம், வஸ்திரம் சமர்ப்பணம், மஹா பூர்ணாஹூதி, கலச அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 11:15 மணி முதல் 11:45 மணி வரை சுவர்ண அபிஷேகம் எனும் தங்க நாணயம் அபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் நடக்கும் அபிஷேகங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரு நாட்களும் விழாவிற்கு வருகை தந்து ஈஸ்வரன், அம்பாள் அருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar