நத்தம் சந்தன கருப்பணசாமி கோயிலில் சுவாமி கற்சிலை பிரதிஷ்டை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 10:06
நத்தம்; நத்தம் சந்தன கருப்பணசாமி கோயிலில் சந்தனகருப்பு சுவாமி கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நத்தம் எம்.ஜி.ஆர்., நகரில் அமைந்துள்ளது சந்தனகருப்பு சுவாமி கோவில்.ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் சந்தனகருப்பு சுவாமிக்கு கல்சிலை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.அதன்படி நேற்று முன்தினம் திருமயம் அருகே புலிவலம் பகுதியில் சுவாமி சிலை செய்யப்பட்டு நத்தம் சந்தனகருப்பு சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் சுவாமி சிலை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் பல்வேறு பூஜைகளுக்கு பின் சுவாமியின் கல்சிலை செப்டம்பர் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.