Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி விரதம்; ஆனைமுகனை ... தேய்பிறை சஷ்டி விரதம்; முருகனை வழிபட வெற்றி நிச்சயம்..! தேய்பிறை சஷ்டி விரதம்; முருகனை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
தேய்பிறை பஞ்சமி; வாராஹியை வழிபட வாழ்வில் நல்ல மாற்றம் வரும்..!
எழுத்தின் அளவு:
தேய்பிறை பஞ்சமி; வாராஹியை வழிபட வாழ்வில் நல்ல மாற்றம் வரும்..!

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
10:06

அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். வாராஹி அம்மனை வழிபட சிறந்த நாள் பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாராஹி அம்மன் அவதரித்தார்!. பஞ்சமியில் வாராகியை வழிபட எதிரி தொல்லை நீங்கும்.  தடைகள் விலகும்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற் கான மிக முக்கியமான நாள்.  சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹி தேவி. சப்தமாதர்களில் வாராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும்,  இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள். 


வாராஹி தேவியின் திருநாமங்கள்... 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி. ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது. பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.


வாராஹி - மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிப்பாள். இந்த தேவி. பஞ்சமி திதி நாட்களில் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில் கோயில்களில் சப்தமாதர்கள் சன்னிதியில் அருளும் வாராஹியை வழிபடுவது சிறப்பு. இன்று வீட்டில் வாராஹி அம்மனை வழிபட கேட்ட வரம் உடனே கிடைக்கும். வீட்டில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை நீங்கும்.. மகிழ்ச்சி நிலைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar