Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து கோவில்களில் உள்ள சாய்பாபா சிலை அகற்ற மனு
எழுத்தின் அளவு:
ஹிந்து கோவில்களில் உள்ள சாய்பாபா சிலை அகற்ற மனு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
10:06

சென்னை : ஹிந்து கோவில்களில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்றக்கோரிய வழக்கில், அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள சாய்பாபா கோவில்களில், வெள்ளை மார்பிள் கல்லால் ஆன சாய்பாபா சிலை உள்ளது. சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. சாய்பாபாவின் உண்மையான பெயர் தெரியவில்லை. அவரது மத அடையாளத்தையும் உறுதி செய்ய முடியவில்லை. சீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் உள்ள ஹிந்து கோவில்களில், சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சாய்பாபா கோவில்களில், நந்தி சிலை உடன் சாய்பாபா சிலையும் நிறுவப்பட்டுஉள்ளது. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது. சாய்பாபா சிலைக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி சிலையை அகற்ற வேண்டும். சாய்பாபாவை பின்பற்றுபவர்கள் உள்ளனர். அதற்காக, ஹிந்து ஆகம விதி, நம்பிக்கையை மீற முடியாது. எனவே, ஹிந்து கோவில்களில் எங்கெங்கு சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளதோ, அவற்றை அகற்ற வேண்டும். எதிர்காலத்திலும், சாய்பாபா சிலையை கோவிலுக்குள் நிறுவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar