Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
10:06

சின்னாளபட்டி; சின்னாளபட்டி கோயில் விழாவில், இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.

சின்னாளபட்டி கீழக்கோட்டை ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது வழக்கம். பெரிய கும்பிடு விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முகூர்த்தக்கால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதலை தொடர்ந்து, பால்குடம் ஊர்வலம். பாலாபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, ஜமீன்தார் முத்துராஜா தானமாக வழங்கிய குதிரையில் பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நேற்று நடந்தது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை, கத்தியில் பூ சுற்றி, அதில் காதலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் கரக ஊர்வலம் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், சவுடம்மா தீசுக்கோ என்ற கோஷத்துடன், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தபடி அழைத்து வந்தனர். கோயிலில் சக்தி சேர்ப்பு நிகழ்ச்சியில், சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமான பக்தர்கள், மார்பில் கத்திபோட்டு வழிபட்டனர். அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar