திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2024 12:07
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும். திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிலையில் இன்று காலை வெகு விமர்சையாக கொடியேற்றம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 13 நாட்கள் விழா நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 7ல் கருடசேவை, 9ல் திருக் கல்யாணம், 12ல் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.