காஞ்சிபுரம்; சின்ன காஞ்சிபுரத்தில்,புண்ணியகோடி ஷேத்திரம் என அழைக்கப்படும் தர்மவர்த்தினி சமேத புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டு, கடந்த மே 19ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதில், சிறப்பு யாகசாலை பூஜையும், அனைத்து சன்னிதிகளுக்கும், மூலவருக்கும் கலசாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.