திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 11:07
திருவள்ளூர்; ஆனி அமாவாசை முன்னிட்டு வீரராகவர் கோவிலில், மூன்று நாள் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி அமாவாசை முன்னிட்டு, பெருமாள், தாயாருக்கு நேற்று முதல் நாளை வரை மூன்று நாள் முத்தங்கி சேவை துவங்கியது. மூன்று நாட்களும் பெருமாள், தாயார் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். மேலும், மூன்று நாட்கள் ஹிருதாபநாசினி குளத்தில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். முதல் நாள் தெப்போற்சவம் நேற்று நடந்தது. மாலை, 6:00 மணியளவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். குளத்தில் மும்முறை உலா வந்து அருள்பாலித்தார். நாளை வரை, மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும்.
வஸ்திரம் ஏலம்: அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த வீரராகவர் கோவிலில், பெருமாள் தாயாருக்கு காணிக்கையாக வரப்பெற்ற வஸ்திரங்கள், இன்று 6ல், காலை 10:30 மணி மற்றும் மாலை 4:30 மணிக்கு தேவஸ்தானம் உட்புறம் பொது ஏலம் நடைபெறும்.