அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை கிராமப் பகுதிகளில் மருத்துவ குணங்கள் நிறைந்த சிவனுக்கு ஏற்ற நாகலிங்க பூ வளர்க்கப்படுகிறது.
நாகலிங்கப்பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளிக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. சிவ பூஜைக்கு ஏற்ற முக்கிய பொருட்களில் நாகலிங்கப்பூவும் ஒன்று. இந்த பூ மருத்துவ குணங்களும் கொண்டது. பூவை பறிக்கும்போது கையில் இதமான உஷ்ணம் ஏற்படும். இது மனித மூளைக்கு நல்லது. நாகலிங்க பூவை வைத்து வழிபட்டால் நீண்ட காலமாக உள்ள தீராத நோய்களும் தீரும். மன வேதனை குறையும். இந்த பூவால் அர்ச்சனை செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய புகழுடைய நாகலிங்கப்பூ அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூர், மடத்துப்பட்டி உட்பட பகுதிகளில் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. சென்னை உட்பட பெறுநகரங்களில் பங்களாக்களில் உள்ள தோட்டங்களில் இதை அழகுக்காக வளர்க்கின்றனர். தற்போது பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்த்து வருகின்றனர். குலசேகரநல்லூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி தன் தோட்டத்தில் நாகலிங்க பூ மரம் வளர்த்து வருகிறார்.
அவர் கூறுகையில், " திருமணம் தடை உள்ள பெண்களுக்கு இந்த பூவை பறித்து சாமிக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் விரைவில் நடக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கிடைக்கும். அதனால் நாகலிங்க பூவை விரும்பி வாங்கி செல்வர். தோல் அரிப்பு போன்றவற்றிற்கும் இந்த பூவை வாங்கி பயன்படுத்துவர். வியாபார அளவிற்கு இந்தப் பூ சாகுபடி இல்லை என்றால் கூட நான் தோட்டத்திற்கு அழகூட்ட வளர்த்து வருகிறேன்.