குக்கே வித்யாபிரசன்ன தீர்த்தரு சுவாமிகள் திருமலையில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 01:07
திருப்பதி; தட்சிண கன்னடா, குக்கே சுப்ரமணிய ஸ்ரீ சுப்ரமணிய மடத்தின் ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தரு சுவாமிகள் இன்று காலை திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தார்.
தட்சிண கன்னடா, குக்கே சுப்ரமணிய ஸ்ரீ சுப்ரமணிய மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ வித்யாபிரசன்ன தீர்த்தரு சுவாமிகள் இன்று காலை திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலுக்குச் சென்றார். ஸ்ரீவாரி கோயில் முன்புறம் வந்த அவரை, திருமலை கோயில் அர்ச்சகர்கள் கோயில் மரியாதையுடன் வரவேற்று சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்து வெளியே வந்த வித்யாபிரசன்ன தீர்த்தரு சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.