மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் புதிய தேரில் மேல் சட்டம் அமைக்கப்பட்டு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 06:07
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் புதிதாக செய்யப்பட்டு வரும் தேரில் மேல் சட்டம் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தகல்லி சோமநாதர் கோயிலில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு சித்திரை திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது சோமநாதர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும்,ஆனந்தவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் என 2 பெரிய தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளடைவில் ஆனந்தவல்லி அம்மன் செல்லும் பெரிய தேர் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக நன்கொடையாளர்களின் முயற்சியில் ஆனந்தவல்லி அம்மனுக்கென தனியாக ஒரு பெரிய தேர் செய்யும் பணிகள் கோவில் முன்பாக உள்ள வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட ராட்சத சக்கரங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று சக்கரங்களுக்கு மேற்புறம் மரத்திலான புதிய சட்டங்கள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தவுடன் அர்ச்சகர்கள் ராஜேஷ்,குமார் உள்ளிட்டோர் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு பூஜைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.