அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக ஸ்வாமிகள் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 03:07
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில், ஞானத்தின் ஞானம் எம்பிரான் மாணிக்கவாசக ஸ்வாமிகளின் குருபூஜை பெருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில்,மாணிக்கவாசகப் பெருமான் அருளச் செய்த திருவாசகம் முழுவதும் தேவாரப் பண்ணிசை முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சி திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில்,திருமுறை கண்ட விநாயகர் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பண்ணிசையோடு திருவாசக முற்றோதுதல் தொடங்கியது. மாலையில் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் கூத்தப்பிரானோடு கலத்தல் ஐக்கிய நிகழ்ச்சியும், சுவாமிகள் திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.