ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆனி சுவாதி நான்காம் திருநாளில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரியாழ்வார் அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் நான்காம் திருநாளில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரியாழ்வார் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூலை 14ல் செப்புத் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.