பரமக்குடியில் வராகி நவராத்திரி விழா; சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 04:07
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் அம்மன் கோயிலில் வராகி அம்மன் நவராத்திரி விழா நடந்தது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் சொர்ண வராஹி அம்மனுக்கு ஜூலை 6 முதல் ஆஷார நவராத்திரி விழா துவங்கி நடக்கிறது. முதல் நாள் அம்மன் வராஹி அலங்காரம், இரண்டாம் நாள் சந்தன காப்பு தொடர்ந்து மூன்றாம் நாளில் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையில் ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சப்தேலு பெரிய கன்னிமார் அம்மன் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.