திருமலைக்குமார சுவாமி கோயிலில் சந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2012 10:11
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி விழா நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமானது. 5.50 மணிக்கு கொடியேற்று விழா திருக்குமரனுக்கு அரோகரா கோஷங்கள் முழங்கிட நடந்தது. தொடர்ந்து திருமலைக்குமரனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வரும் 16ம் தேதி சண்முகப்பெருமான் படிவிட்டு இறங்குகிறார். 17ம் தேதி பெரும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தில் மாலை 6 மணிக்கு யானை முகசூரனையும், 6.30 மணிக்கு சிங்கமுக சூரனையும், 6.45மணிக்கு மகா சூரனையும் திருக்குமரன் சம்ஹாரம் செய்கிறார். 19ம் தேதி வண்டாடும் பொட்டலில் திருத்தேரோட்டம் நடக்கிறது.கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று நடந்த விழாவில் திருக்கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கார்த்திக், பண்பொழி டவுண் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், ராசா கன்ஸ்ட்ரக்சன் பொதுமேலாளர் ரவிராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.