பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆர்.பி. காட்டூரில், மதுரைவீரன், சப்தகன்னியர்களுக்கு ஐப்பசி மாத பெருந்திருவிழா துவங்கியது. ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.பி.காட்டூரில், மதுரை வீரன், மாரியம்மன், ஐந்துவீட்டு முத்துசாமி, சப்த கன்னியர்கள், பெரியாண்டவர் பெரியசாமி, ஒண்டிவீரசுவாமி ஆகிய கோவில்ககளில் திருவிழா நேற்று பகல், 12 மணிக்கு பொன் காளியம்மன், மகா கணபதிக்கு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து மாலை, 3 மணிக்கு சப்த கன்னியர்களுக்கு ஆராதனை நடந்தது. இரவு, 11 மணிக்கு மாரியம்மன் ஸ்வாமிக்கு பூச்சாட்டுதல், கும்ப விழா நடந்தது. இன்று பகல், 12 மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்வாமி சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாலை, 5 மணிக்கு அக்னி கரகம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. வரும், 16ம் தேதி மாலை, 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா பாரதி, மணியக்காரர் கதிர்வேல், விழா குழுவினர் செய்துள்ளனர்.