மேட்டுப்பாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2024 12:07
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதனையொட்டி நேற்று 9ம் தேதி காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்வு நடைபெற்றது. இன்று புதன்கிழமை காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 9-15 மணிக்கு தண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.