Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ரிஷப ... அவிநாசி மாரியம்மன் மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் அவிநாசி மாரியம்மன் மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொட்டிபாளையம் சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தொட்டிபாளையம் சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2024
02:07

சோமனூர்; தொட்டிபாளையம், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சோமனூர் அடுத்த தொட்டிபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கன்னி மூல கணபதி, முருகன், வெள்ளையம்மாள், சிவ துர்க்கை அம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 8 ம்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.. சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக் குடங்கள் மற்றும் முளைப்பாரி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்பஸ்தாபனம் மற்றும் முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று முன் தினம் இரு கால ஹோமங்கள் மற்றும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால ஹோமம், பூராணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 7:00 மணிக்கு, விமானம் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாரம்பரிய காவடி ஆட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar