ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் மாணிக்கவாசகர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2024 02:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆனி மக நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நேற்று மாலை 3:00 மணி அளவில் ஞானசேகர் என்பவரின் திருவாசக விண்ணப்பம். நேற்று மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது அதை தொடர்ந்து, ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.