மயிலாடுதுறை: அய்யாவாடி மகாபிரத்தியங்கிரா தேவி கோவிலில் நேற்று நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்ப டுவது வழக்கம். ஐப்பசி மாதம் தீபாவளியையொட்டி அமாவாசையன்று மட்டும் மிளகாய் வற்றலுக்கு பதிலாக இனிப்பு கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.தீபாவளி, அமாவாசை தினமான நேற்று காலை மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தண்டபாணி குருக்கள், யாகத்தில் இனிப்பு கொண்டு நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். பின் அம்பாளுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டது.இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.