ஆஷாட நவராத்திரி விழாவில் ஊஞ்சல் உற்ஸவம்; சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 10:07
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயில் ஆஷாட நவராத்திரி விழாவில் ஊஞ்சல் உற்ஸவம், விளக்கு பூஜை , அன்னதானம் நடந்தது. வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. இரவு பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.