உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 03:07
உத்திரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயில் விளங்கி வருகிறது. பித்ரு கடன் போகவும், முன்னோர்கள் விட்ட சாபங்கள் நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக நாள்தோறும் வராகி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆடி உற்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு வராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. வருகிற ஜூலை 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலையில் பால்குடம் புறப்பாடும் அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் மாலை 6:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் பூச்சொரிதல் விழா உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.