பரமக்குடி; பரமக்குடியில் நடக்கும் ஆஷாட நவராத்திரி விழாவில் வராஹி அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் வராஹி அம்மனுக்கு ஆசாட நவராத்திரி விழா நடக்கிறது. இங்கு தினமும் பெண்கள் மஞ்சள் அரைத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதன்படி காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் அருள் பாலிக்கிறார்.