Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோயிலில் வெண்ணை காப்பு ... திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ஆடி தபசு விழா கொடியேற்றம் திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பெருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பெருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
05:07

அவிநாசி; பாடல் பெற்ற தலமான அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில், ஆடல்வல்லானுக்கு 16 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.


அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேசுவரர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தலமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இத்திருத்தலத்தில், ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆனி திருமஞ்சன விழாவானது, அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில், சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரருக்கு, விபூதி, நல்லெண்ணெய்,சந்தனாதி தைலம்,திருமஞ்சனம்,மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சள் உள்ளிட்ட 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நடராஜருக்கும்,சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அணிகாரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar