தஞ்சை பெரிய கோயிலில் வெண்ணை காப்பு அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 05:07
தஞ்சாவூர்; தஞ்சை பெரிய கோயிலில் வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. 8ம் நாள் விழாவான இன்று மகா வாராஹிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனை காட்டப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோயில் பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோவில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் தனி சன்னதியில் மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூலை 5 ந்தேதி தொடங்கியது,10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும். அதைப்போல் 8ம் நாளாக இன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.