திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ஆடி தபசு விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 05:07
திருச்சுழி; திருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலையில் திருமேனிநாத சுவாமி ,துணை மாலை அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தங்க கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதையடுத்து கொடியேற்றம் நடந்தது. ஆடித்தபசு விழா 10 நாட்கள் நடைபெறும். குதிரை, சிம்மம், அன்னம், காமதேனு, ரிஷப வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். ஜூலை 21 ல், திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு திருச்சுழி குண்டாற்றில் எழுந்தருளி துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.