Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரும்பாக்கம் கெங்கையம்மன் கோவிலில் ... நூற்றாண்டுக்கு பின் திருப்பணி; பல்லடம் மாகாளியம்மன் கோவிலில் பாலாலயம் நூற்றாண்டுக்கு பின் திருப்பணி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் விநாயகர், ஐயப்பன் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் விநாயகர், ஐயப்பன் கோவில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
06:07

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே விநாயகர் கோவிலிலும், சிறுமுகையில் ஐயப்பன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், இம்மானுவேல் நகர் செல்வபுரத்தில், செல்வ விநாயகர் மற்றும் செல்வ மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, தீபாராதனையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடும், வாஸ்து சாந்தி பூஜையும், முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை, 9:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீதும், விநாயகர், அம்மன் சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அபிஷேகம், அலங்கார பூஜையை அடுத்து, மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், யாக வேள்வி பூஜைகளையும், கும்பாபிஷேகத்தையும் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


சிறுமுகை எலகம்பாளையத்தில், கீழ் சபரி என்னும் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் விழாவில், எலகம்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து, புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களை, ஐயப்பன் கோவிலுக்கு மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், அஸ்த்ர கலசம் ஆகிய பூஜைகள் நடந்தன. இன்று காலை திரவிய கலச பூஜையும், தேவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு கணபதி, முருகன், சிவலிங்கம், மகாவிஷ்ணு, விஷ்ணு துர்கா, நவகிரகம், நாகராஜா, கருப்பண்ணன் ஆகிய சுவாமிகளுக்கும், விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 10:30 மணிக்கு, ஐயப்பன் சுவாமிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூத பலி தீபாராதனையும், மதியம் உச்சி பூஜையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் திருப்பணிக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar