பதிவு செய்த நாள்
13
ஜூலை
2024
10:07
ராமேஸ்வரம்; உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரியை சேர்ந்தவர் சுவாமி ராஜ்கிரி மகராஜ், 52. சாதுவான இவர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதற்காக, 2023 ஏப்., 14ல் கங்கோத்ரியில் இருந்து படுத்து கும்பிட்டபடி தன் யாத்திரையை துவக்கினார். உ.பி., மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக, 3,800 கி.மீ., கடந்து, நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். தினமும் 5 -– 10 கி.மீ., மட்டும் படுத்து கும்பிட்டபடி வந்துள்ளார்.