Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தனுக்கு உகந்த நாள்; திருப்போரூர் ... கட்டிக்குளத்தில் வரும் 20ம் தேதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா கட்டிக்குளத்தில் வரும் 20ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
02:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சன்னிதி தவிர்த்து, ராஜகோபுரம் மற்றும் உட்பிரகார சன்னிதிகளை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, உட்பிரகார சன்னிதி மற்றும் ராஜகோபுரம் திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாயார் கே.ஆர்.காமேஸ்வர குருக்கள் தலைமையில் கடந்த பிப்., 26ல் நடந்தது. பாலாலயம் நடந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் திருப்பணி துவக்கப்படாமல் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், திருப்பணியை விரைவில் துவக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம், திருப்பணியை துவக்க தீவிரம் காட்டியுள்ளது. திருப்பணியில் முதற்கட்டமாக கோவில் ராஜகோபுரம் 14.90 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் திருப்பணி துவங்க உள்ளது. இதையொட்டி கோபுரத்திற்கு சவுக்கு கம்புகளால் சாரம் அமைக்கும் பணி இன்று நடந்தது. ராஜகோபுரம் திருப்பணிையை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் உள்ள பிற சன்னிதிகளில் திருப்பணியை விரைவில் துவக்கும் வகையில், மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar