கட்டிக்குளத்தில் வரும் 20ம் தேதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 03:07
மானாமதுரை; கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதரித்த தினத்தை முன்னிட்டு வருகிற 20ம் தேதி காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் அவதார இல்லம் பட்டமான் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் அவதார விழாவை முன்னிட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான அடியார்களும்,ஆன்மீக பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர்,தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.